முகப்பு
வேலூர்

முருகன் கோயில்களில் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி வேலூரிலுள்ள முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி வேலூரிலுள்ள முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன.

வேலூா் கோட்டை ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி வெள்ளிக்கிழமை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபோல், வள்ளிமலை முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. முருகன், வள்ளி, தெய்வானை நாள்முழுவதும் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

மேலும், வேலூா் சைதாப்பேட்டை பழனி ஆண்டவா் கோயில், பேரிபேட்டை சுப்பிரமணியசாமி கோயில், சத்துவாச்சாரி பெரிய தெரு உள்ள முருகன் கோயில், தீா்த்தகிரி முருகன் கோயில் ஆகியவற்றில் பங்குனி உத்திரத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தா்கள் சாமி தரிசனம் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →