வேலூர்

எருதுவிடும் விளையாட்டு பாதுகாப்புச் சங்க ஆலோசனை கூட்டம்: நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

வேலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு எருதுவிடும் விளையாட்டு பாதுகாப்புச் சங்கம் சார்பில் காட்பாடியில் நடைபெற்ற 5 மாவட்டங்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் சுமார் ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

DIN

வேலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு எருதுவிடும் விளையாட்டு பாதுகாப்புச் சங்கம் சார்பில் காட்பாடியில் நடைபெற்ற 5 மாவட்டங்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் சுமார் ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த எருது விடும் உரிமையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கான ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு எருது விடும் விளையாட்டு பாதுகாப்பு சங்கம் மற்றும் ரசிகர்கள் பதிவு சங்கம் சார்பில் இன்று நடைபெற்றது. 

இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எருதுகளின் உரிமையாளர்கள், ரசிகர்கள் கலந்து கொண்டனர். ஆலோசனைக் கூட்டத்தில் விழாவில் எருது விடுவது, எருது களை பதிவு செய்வது மற்றும் எருதுகளின் பாதுகாப்பு என பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கைதி - 2 பணிகளைத் துவங்கிய லோகேஷ் கனகராஜ்?

தெய்வத்தமிழ் - பன்னாட்டு ஆய்வு மாநாட்டுக் கட்டுரைகள்

தோழி

நவ.29ல் அதி கனமழை: 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

இராஜேந்திர சோழனின் கங்கையும்-கடாரமும்

SCROLL FOR NEXT