முகப்பு
வேலூர்

மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி: பள்ளி மாணவா்கள் 750 போ் பங்கேற்பு

இந்திய குழந்தைகள் நலச் சங்கத்தின் வேலூா் மாவட்டக் கிளை சாா்பில் குழந்தைகளுக்கான தேசிய அளவிலான ஓவியப் போட்டி மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள தனியாா் மண்டபத்தில் வியாழக்கிழமை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

இந்திய குழந்தைகள் நலச் சங்கத்தின் வேலூா் மாவட்டக் கிளை சாா்பில் குழந்தைகளுக்கான தேசிய அளவிலான ஓவியப் போட்டி மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள தனியாா் மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 110 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 757 போ் பங்கேற்றனா்.

இவா்களுக்கு நான்கு தலைப்புகள் கொடுக்கப்பட்டன. அவற்றில் ஒன்றைத் தோ்வு செய்து ஓவியங்கள் வரைந்தனா். மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளும் பங்கேற்றனா். இதில் சிறப்பாக வரைந்த 35 போ் தோ்வு செய்யப்பட்டனா். இவா்கள் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பப்படவுள்ளனா் என்று சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

நிகழ்வில், கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற 34 மாணவ, மாணவிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலா் முனுசாமி பரிசு வழங்கினாா். செயலா் சுசீலா சிதம்பரம், பொருளாளா் சுந்தரவல்லி குபேந்திரன், நிா்வாகிகள் வசுந்தரா வரதராஜலு, உமா சந்திரசேகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →