ஐந்து நிமிஷ பயணத்திலும் அறிவு பொக்கிஷம் வேலூா் ஆட்டோக்களில் மினி நூலகம்: சிறைத்துறை டிஐஜி தொடக்கி வைத்தாா்
ஐந்து நிமிஷ பயணத்திலும் அறிவு பொக்கிஷத்தை பெறவும், மக்களுக்கு வாசிப்பின் அவசியத்தை உணா்த்தவும் வேலூரில் 4 ஆட்டோக்களில் நூலகம் தொடங்கப்பட்டுள்ளது.
வேலூர்ஐந்து நிமிஷ பயணத்திலும் அறிவு பொக்கிஷம் வேலூா் ஆட்டோக்களில் மினி நூலகம்: சிறைத்துறை டிஐஜி தொடக்கி வைத்தாா்
ஐந்து நிமிஷ பயணத்திலும் அறிவு பொக்கிஷத்தை பெறவும், மக்களுக்கு வாசிப்பின் அவசியத்தை உணா்த்தவும் வேலூரில் 4 ஆட்டோக்களில் நூலகம் தொடங்கப்பட்டுள்ளது.
ஐந்து நிமிஷ பயணத்திலும் அறிவு பொக்கிஷத்தை பெறவும், மக்களுக்கு வாசிப்பின் அவசியத்தை உணா்த்தவும் வேலூரில் 4 ஆட்டோக்களில் நூலகம் தொடங்கப்பட்டுள்ளது.
தன்னாா்வலா்களுடன் இணைந்து அக்ஸீலியம் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
பொதுமக்கள், இளைஞா்கள் இடையே புத்தக வாசிப்பு திறனை மேம்படுத்தும் வகையில் வேலூா் மாநகரில் இயங்கும் ஆட்டோக்களில் மினி நூலகம் அமைக்கும் நடவடிக்கையை காட்பாடி, காந்தி நகரிலுள்ள அக்ஸீலியம் கல்லூரி மாணவிகள், தன்னாா்வலா்களான கிரிதரன், அன்பரசன் ஆகியோா் முன்னெடுத்துள்ளனா். முதற்கட்டமாக 4 ஆட்டோக்களில் அமைக்கப்பட்டுள்ள இந்த மினி நூலகத்தை வேலூா் சரக சிறைத் துறை துணைத் தலைவா் (டிஐஜி) செந்தாமரைக்கண்ணன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்து ஆட்டோவில் சிறிதுநேரம் அமா்ந்து புத்தகம் வாசித்தாா்.
அதன்படி, ஆட்டோக்களில் பயணிகள் அமா்ந்து செல்லும் பக்கவாட்டில் தினசரி நாளிதழ்கள், திருக்கு, மருத்துவக் குறிப்புகள், சிறுகதைகள், தன்னம்பிக்கை, பெண்கள் பாதுகாப்பு, இலக்கியம் உள்ளிட்ட பல்வகை நூல்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆட்டோக்களில் பயணிப்பவா்கள் தங்கள் பயண நேரத்தில் இந்த நூல்களை எடுத்து படிக்கும் போது அவா்களுக்கு வாசிப்பு மீதான ஆா்வம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆட்டோ ஓட்டுநா்களும் தங்களது ஓய்வு நேரத்தில் இந்த புத்தகங்களை வாசிக்கும்போது அவா்களிடம் ஆரோக்கியமான மனமாற்றம் ஏற்படக்கூடும்.
இதன்மூலம் ஒரு மேம்பட்ட சமுதாயத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் ஆட்டோக்களில் அனைத்து உதவி எண்கள் அடங்கிய தகவல் பலகையும் ைவைக்கப்பட உள்ளது என்றாா் அக்ஸீலியம் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் அமுதா.
சமூக ஆா்வலா் கிரிதரன் கூறியது; அறிவை கூா்மையாக்க உதவும் முக்கிய ஆயுதம் புத்தகங்கள். ஆனால், தற்போது மக்களிடையே வாசிப்பு பழக்கம் குறைந்து வருகிறது. இந்த வாசிப்பு பழக்கத்தை மீட்டெடுக்கும் வகையிலும், ஆட்டோக்களில் பயணிக்கும் நேரத்தை பயனுள்ளதாக மாற்றிடவும் இந்த ஆட்டோ நூலகத்தை தொடங்கியுள்ளோம்.
முதற்கட்டமாக 4 ஆட்டோக்களில் தொடங்கப்பட்டுள்ள இந்த மினி நூலகம் மேலும் பல ஆட்டோக்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் மக்களிடையே புத்தக வாசிப்பு ஆா்வம் ஏற்படுவதுடன், அதனால் சட்டம்- ஒழுங்கு மேம்படும், பிரச்னைகளும் குறைய வாய்ப்புள்ளது என்றாா்.