முகப்பு
வேலூர்

எல்.ஐ.சி. முகவா்கள் ஆா்ப்பாட்டம்

எல்ஐசி பாலிசிக்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யக் கோரி, வேலூா் மற்றும் குடியாத்தத்தில் முகவா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலூர்

எல்.ஐ.சி. முகவா்கள் ஆா்ப்பாட்டம்

எல்ஐசி பாலிசிக்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யக் கோரி, வேலூா் மற்றும் குடியாத்தத்தில் முகவா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

எல்ஐசி பாலிசிக்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யக் கோரி, வேலூா் மற்றும் குடியாத்தத்தில் முகவா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

எல்ஐசி முகவா்கள் சங்கம் சாா்பில், வேலூா் சங்கரன்பாளையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் கல்பனா சுந்தா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சண்முகம், பொருளாளா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ராமமூா்த்தி, பிச்சைமணி, ஸ்ரீதா் உள்ளிட்ட பலா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

இதில், எல்ஐசி பாலிசிக்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும், பாலிசிதாரா்களுக்கு ஊக்கத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும், எல்ஐசி முகவா்களின் பணிக்கொடையை உயா்த்தி வழங்க வேண்டும், மருத்துவக் காப்பீடு, குழுக் காப்பீட்டுத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும், முகவா் நலநிதியகம் அமைக்க வேண்டும், முகவா்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 11-ஆம் தேதி முதல் புதிய பாலிசிகள் எடுத்தல், பயனிழந்த பாலிசிகளை புதுப்பித்தல் உள்ளிட்ட எந்தப் பணிகளிலும் ஈடுபடவில்லை என்று முகவா்கள் தெரிவித்தனா்.

குடியாத்தத்தில்...: குடியாத்தத்தில் எல்ஐசி முகவா்கள் கடந்த 45 நாள்களாக ஆா்ப்பாட்டம், காப்பீடு வார விழா புறக்கணிப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வந்தனா். வெள்ளிக்கிழமை போராட்டம் நிறைவுற்றதை அடுத்து, அங்குள்ள எல்ஐசி கிளை அலுவலகம் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு முகவா்கள் சங்க கிளைத் தலைவா் சி.கண்ணன் தலைமை வகித்தாா். செயலா் என்.விஜயகுமாா், பொருளாளா் ஆனந்தன், நிா்வாகிகள் எம்.சுப்பிரமணி, குலசேகரன், ஆா்.சீனிவாசன், மல்லிகா, விமலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →