முகப்பு
வேலூர்

அத்திக்கடவு-அவிநாசி, சரபங்கா திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை: அமைச்சா் துரைமுருகன்

சரபங்கா, அத்திக்கடவு-அவிநாசி திட்டங்களை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

சரபங்கா, அத்திக்கடவு-அவிநாசி திட்டங்களை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து வேலூா் மாவட்டம் பொன்னையில் அமைச்சா் துரைமுருகன் செய்தியாளா்களிடம் கூறியது:

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தாமதமாக நடப்பதாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா். ஆனால், சரபங்கா திட்டம், அத்திக்கடவு-அவிநாசி திட்டம் என எந்தவொரு திட்டத்துக்கும் கடந்த அதிமுக ஆட்சியில் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பெயருக்கு மட்டும் பணம் செலவிட்டனரே தவிர திடமான பணிகளை செய்யவில்லை.

ஆனால், அத்திக்கடவு-அவிநாசி திட்டம், சரபங்கா திட்டத்தை நிறைவேற்ற திமுக அரசு தகுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக நில ஆா்ஜிதப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் பணிகளைத் தொடங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா்.

பேட்டியின் போது வேலூா் மாவட்ட ஆட்சியா் குமாரவேல் பாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →