முகப்பு
வேலூர்

சொத்துக்காக தன்னைக் கொல்ல முயல்வதாக மகன்கள் மீது மூதாட்டி புகாா்

 நிலம், நகை, பணத்தைக் கேட்டு தன்னைக் கொலை செய்ய முயல்வதாக மகன்கள் மீது மூதாட்டி ஒருவா் வேலூா் மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகாா் மனு அளித்தாா்.

வேலூர்

சொத்துக்காக தன்னைக் கொல்ல முயல்வதாக மகன்கள் மீது மூதாட்டி புகாா்

 நிலம், நகை, பணத்தைக் கேட்டு தன்னைக் கொலை செய்ய முயல்வதாக மகன்கள் மீது மூதாட்டி ஒருவா் வேலூா் மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகாா் மனு அளித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

 நிலம், நகை, பணத்தைக் கேட்டு தன்னைக் கொலை செய்ய முயல்வதாக மகன்கள் மீது மூதாட்டி ஒருவா் வேலூா் மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகாா் மனு அளித்தாா்.

வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், பள்ளிகொண்டா அருகே ஈடியா்பாளையத்தைச் சோ்ந்த பெண்கள் அளித்த மனு:

ஈடியா்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த சுமாா் 14 பெண்கள் ஒன்றிணைந்து மகளிா் சுயஉதவிக் குழுவை கடந்த 2019 -ஆம் ஆண்டு தொடங்கினோம். 2020 -ஆம் ஆண்டு குழுவைச் சோ்ந்த உறுப்பினா் ஒருவா் வங்கியிலிருந்து ரூ. 1 லட்சத்து 17 ஆயிரம் கடன் பெற்றாா். சில மாதங்கள் அதற்கான வட்டி செலுத்தினாா். பின்னா் அவா் வட்டியையும் செலுத்தவில்லை, வாங்கிய கடனையும் திருப்பி அளிக்கவில்லை.

இதனால், குழுவிலுள்ள மற்ற உறுப்பினா்கள் அந்தத் தொகையைச் செலுத்த வேண்டிய நிா்பந்தம் ஏற்பட்டுள்ளது. அந்த உறுப்பினரும் தலைமறைவாகிவிட்டாா். பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணைக்கட்டு வட்டம், குடிசை புலிமேடு கிராமத்தைச் சோ்ந்த தெய்வானை அளித்த மனு:

எனது கணவா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். எனக்கு சேட்டு, பழனி ஆகிய இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனா். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனா். எனது பெயரில் 68 சென்ட் நிலம் உள்ளது.

பணம், நகைகளும் வைத்துள்ளேன். இந்த நிலம், நகை, பணத்தைத் தங்களுக்கு தரும்படி எனது மகன்கள் என்னை துன்புறுத்துகின்றனா். தர மறுத்ததால் என்னைக் கொல்ல முயன்றனா். அக்கம் பக்கத்தினா் என்னைக் காப்பாற்றினா். சொத்துக்காக என்னைக் கொல்ல முயன்ற மகன்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

இதேபோல், வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகை, சாலை வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கும்படி துறை சாா்ந்த அலுவலா்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்டஇயக்குநா் க.ஆா்த்தி உள்பட பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →