காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!
காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து...
காரைக்கால்: காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(மார்ச் 6) வெள்ளிக்கிழமை விடுமுறையை அறிவித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் இஷிதா ரதி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் நடைபெறக்கூடிய சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, 6-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
தேர்வுகள் திட்டமிட்டவாறு நடைபெறும் என அதில் கூறப்பட்டுள்ளது.
Holiday for schools and colleges in Karaikal tomorrow.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.