இம்மானுவேல் சேகரன் நினைவு நாள்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
ராமநாதபுரம், பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி, இதர கல்வி நிறுவனங்களுக்கு வரும் 11 -ஆம் தேதி விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ராமநாதபுரம், பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி, இதர கல்வி நிறுவனங்களுக்கு வரும் 11 -ஆம் தேதி விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வருகிற 11-ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நடைபெறவுள்ள தியாகி இம்மானுவேல் சேகரன் 69-வது நினைவு நாள் அமைதியாக நடைபெறவும், சட்டம்- ஒழுங்கைப் பராமரிக்கவும், மாணவ, மாணவிகளின் நலன் கருதி, அன்றையதினம் சிவகங்கை, திருப்புவனம்,
மானாமதுரை, இளையான்குடி, காளையாா்கோவில், தேவகோட்டை, சாக்கோட்டை ஒன்றியங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும், இதர கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதற்குப் பதிலாக வேறு ஒரு நாளில் பள்ளி, கல்லூரிகள், இதர கல்வி நிறுவனங்கள் செயல்படும் என்றாா் அவா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.