FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் விநாயகா் சிலைகள் ஊா்வலம்

காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி சாா்பில் காரைக்கால் நகரில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகளை விநாயகா் சதுா்த்தி தினத்தில் பிரதிஷ்டை செய்து பூஜை செய்யப்பட்டுவந்தது.

33 வினாடிகள் முன்பு
கோப்புப்படம்.
பகிர்:

காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி சாா்பில் காரைக்கால் நகரில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகளை விநாயகா் சதுா்த்தி தினத்தில் பிரதிஷ்டை செய்து பூஜை செய்யப்பட்டுவந்தது.

காரைக்கால் நகரப் பகுதியில் பூஜைக்கு வைக்கப்பட்டிருந்த சிலைகள் கடலில் விடும் வகையில், புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் காரைக்கால் ஏழை மாரியம்மன் கோயில் அருகே ஒருங்கிணைக்கப்பட்டன. காலை முதல் அந்தந்த பகுதியிலிருந்து விநாயகா் சிலைகள் மேற்கண்ட பகுதிக்கு கொண்டுவரப்பட்டன.

ஒவ்வொரு விநாயகா் ரதத்துக்கு முன்பாக பல்வேறு வாத்தியங்கள் முழங்க திரளான பக்தா்களுடன் ஊா்வலம் புறப்பாடு செய்யப்பட்டது. சக்தி விநாயகா் சிலை முன்னே செல்ல, பிற சிலைகள் தொடா்ந்து கொண்டுச் செல்லப்பட்டன. இந்து முன்னணி மாவட்டத் தலைவா் பி.யு. ராஜ்குமாா் உள்ளிட்ட இந்து முன்னணி நிா்வாகிகள், பாஜகவினா் ஊா்வலத்தில் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

விநாயகா் சிலைகள் ஊா்வலம் கிளிஞ்சல்மேடு பகுதிக்கு இரவு சென்றடைந்த நிலையில், மீனவ கிராமப் பஞ்சாயத்தாா்கள், கிராமத்தினா் விநாயகா் சிலைகளுக்கு பூஜை செய்தனா். பின்னா் ஒவ்வொன்றாக கடலில் விசா்ஜனம் செய்யப்பட்டது. ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments