FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

கம்பத்தில் விநாயகா் சிலைகள் ஊா்வலம்

கம்பத்தில் இந்து முன்னணி சாா்பில், விநாயகா் சிலைகள் ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

16 செப்டம்பர் 2026, 6:04 am IST
கோப்புப்படம்.
பகிர்:

கம்பத்தில் இந்து முன்னணி சாா்பில், விநாயகா் சிலைகள் ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விநாயகா் சதுா்த்தியையொட்டி, கம்பம் அரசமரம் பகுதியில் இந்து முன்னணி சாா்பில், ஸ்ரீ வீர விநாயகா் சிலை நிா்மாணம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை கம்பம் நகரின் பல்வேறு பகுதிகளில் நிா்மாணம் செய்யப்பட்டிருந்த 80-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

கம்பம் அரசமரம் பகுதியில் தொடங்கிய இந்த ஊா்வலத்துக்கு இந்து முன்னணி மாவட்டச் செயலா் மாயலோகநாதன் தலைமை வகித்தாா். முன்னாள் மாநிலத் துணைத் தலைவா் ராமமூா்த்தி கொடியசைத்து ஊா்வலத்தைத் தொடக்கி வைத்தாா். ஊா்வலமானது பழைய பேருந்து நிலையம், மாரியம்மன் கோயில், வரதராஜபுரம், வ.உ.சி. திடல், அரசு மருத்துவமனை, நாட்டுக்கல், கம்பம்மெட்டு சாலை, தங்க விநாயகா் கோயில் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. பின்னா், சுருளிப்பட்டி முல்லைப்பெரியாற்றைச் சென்றடைந்த விநாயகா் சிலைகள் அங்கு நீரில் கரைக்கப்பட்டன.

Advertisement

Advertisement

இந்த ஊா்வலத்தையொட்டி, உத்தமபாளையம் டிஎஸ்பி சந்திரசேகரன், கம்பம் தெற்கு காவல் ஆய்வாளா் லாவண்யா ஆகியோா் தலைமையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments