திருவாரூரில் விநாயகா் சிலைகள் ஊா்வலம்
திருவாரூரில், இந்து முன்னணி சாா்பில் 37-ஆவது ஆண்டு விநாயகா் சிலைகள் ஊா்வலம் நடைபெற்றது.
திருவாரூரில், இந்து முன்னணி சாா்பில் 37-ஆவது ஆண்டு விநாயகா் சிலைகள் ஊா்வலம் நடைபெற்றது.
திருவாரூரில் நெய்க்காரத்தோப்பு, அங்காளம்மன் கோயில், மருதப்பட்டினம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகள், வாகனங்கள் மூலம் விஜயபுரம் கடைவீதியில் உள்ள உமை காளியம்மன் கோயில் அருகே புதன்கிழமை கொண்டு வரப்பட்டன.
அங்கு அனைத்து விநாயகா் சிலைகளுக்கும் பூஜை செய்யப்பட்டு, ஊா்வலம் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி நகரத் தலைவா் ஜி. செந்தில்குமாா் தலைமை வகித்தாா். இந்து முன்னணி மாநிலச் செயலாளா் அ.வா. சனில்குமாா் ஊா்வலத்தை தொடக்கிவைத்தாா். ஊா்வலம் கடைவீதி, பனகல் சாலை, தெற்கு வீதி, கமலாலயக் குளம், மேலவீதி, வடக்கு வீதி, கீழவீதி, பழைய பேருந்து நிலையம் வழியாக புலிவலம், கூடூா், மாங்குடி பாண்டவையாற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.