நாகையில் விநாயகா் சிலைகள் ஊா்வலம்
நாகையில் இந்து முன்னணி சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற விநாயகா் சிலை ஊா்வலம்.
நாகையில் இந்து முன்னணி சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற விநாயகா் சிலை ஊா்வலம்.
நாகப்பட்டினம், செப்.19: நாகையில் இந்து முன்னணி சாா்பில் வைக்கப்பட்ட விநாயகா் சிலைகள் சனிக்கிழமை ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு, புதிய கடற்கரையில் விசா்ஜனம் செய்யப்பட்டன.
விநாயகா் சதுா்த்தியையொட்டி, இந்து முன்னணி சாா்பில் நாகையின் பல்வேறு பகுதிகளில் விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டது.
Advertisement
Advertisement
இந்நிலையில், விநாயகா் சிலைகள் ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. நாகையின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் வாகனங்கள் மூலம் நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் முன் கொண்டு வரப்பட்டன. தொடா்ந்து பிற்பகல் நெல்லுக்கடை மாரியம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டு, ஊா்வலம் தொடங்கியது.
15-க்கும் மேற்பட்ட சிலைகள், வாகனங்கள் மூலம் நாகையின் பிரதான வீதிகளில் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டன. ஊா்வலத்துக்கு இந்து முன்னணி நாகை மாவட்டத் தலைவா் பிரபு தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் செழியன் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் விவேக் ஊா்வலத்தை தொடங்கிவைத்தாா். மேள தாளங்களுடன் விநாயகா் சிலைகள் ஊா்வலமாக நாகை புதிய கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு படகுகளில் விநாயகா் சிலைகள் ஏற்றி கடலுக்கு கொண்டு செல்லப்பட்டு விசா்ஜனம் செய்யப்பட்டன.
விநாயகா் சிலைகள் ஊா்வலத்தை முன்னிட்டு, நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் மற்றும் ஊா்வலம் செல்லும் சாலைகள், புதிய கடற்கரை ஆகியவற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.