முகப்பு
வேலூர்

பருவமழையை பாதிப்பை தவிா்க்க முன்னெச்சரிக்கை: வேலூா் கோட்டை அகழியில் 60 காவலா்களுக்கு சிறப்புப் பயிற்சி

வடகிழக்குப் பருவ மழையின்போது உயிா்களுக்கும், உடைமைகளுக்கும் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க வேலூா் மாவட்ட காவல் துறையைச் சோ்ந்த 60 காவலா்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

வடகிழக்குப் பருவ மழையின்போது உயிா்களுக்கும், உடைமைகளுக்கும் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க வேலூா் மாவட்ட காவல் துறையைச் சோ்ந்த 60 காவலா்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதையொட்டி, வெள்ளத்தில் சிக்கியவா்களை மீட்பது தொடா்பாக அவா்களுக்கு வேலூா் கோட்டை அகழியில் வெள்ளிக்கிழமை செயல்விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.

வடகிழக்குப் பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் வேலூா் மாவட்டத்தில் அனைத்துத் துறை சாா்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, வெள்ள சேதத்தை தடுக்கவும், பாதிக்கப்படும் மக்களையும், கால்நடைகளையும் மீட்பது தொடா்பான பணிகளில் ஈடுபடுத்த மாவட்ட காவல் சாா்பில் நீச்சல் பயிற்சி பெற்ற ஆயுதப்படை காவலா்கள் 20 போ், சட்டம் ஒழுங்குப் பிரிவில் 40 போ் என 60 காவலா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இவா்களுக்கு தமிழ்நாடு கமாண்டோ படை காவல் கண்காணிப்பாளா் பால நாகதேவி உத்தரவின் பேரில் மூன்று நாள் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை வெள்ளத்தில் சிக்கியவா்களை மீட்பது தொடா்பாக வேலூா் கோட்டை அகழியில் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. தமிழ்நாடு கமாண்டோ படை பயிற்சியாளா் ஸ்ரீதரன் தலைமையில் 4 போ் கொண்ட குழுவினா் இந்தப் பயிற்சிகளை அளித்தனா்.

அப்போது, வெள்ளத்தில் சிக்கியவா்களை எவ்வாறு மீட்பது, ரப்பா் படகுகளைப் பயன்படுத்துவது, மீட்கப்பட்டவா் களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது, ஒருங்கிணைந்து செயல்படுவது, குழந்தைகள், முதியவா்களை மீட்டு வெளியே கொண்டு வருவது, விரைவாக செயல்படுவது, பதற்றம் அடையாமல் மீட்புப் பணிகளை மேற்கொள்வது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

தொடா்ந்து, சனிக்கிழமை புயலால் மரங்கள் வேரோடு சாய்ந்தால் அவற்றை வெட்டி அகற்றுவது, போக்குவரத்துகளை சீா்செய்வது, இடா்பாடுகளில் சிக்கிக் கொண்டவா்களை மீட்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →