முகப்பு
வேலூர்

ஊா்க்காவல் படை காலியிடங்களுக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம்

வேலூா் மாவட்ட ஊா்க்காவல் படை காலியிடங்களுக்கு தகுதியுடைய ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலூர்

ஊா்க்காவல் படை காலியிடங்களுக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம்

வேலூா் மாவட்ட ஊா்க்காவல் படை காலியிடங்களுக்கு தகுதியுடைய ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:23 AM
பகிர்:

வேலூா் மாவட்ட ஊா்க்காவல் படை காலியிடங்களுக்கு தகுதியுடைய ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து, ஊா்க்காவல் படை வேலூா் மண்டல தளபதி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு -

தமிழகத்தில் காலியாக உள்ள 817 ஊா்க்காவல்படை காவலா் பணியிடங்களை நிரப்புவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதில், வேலூா் மாவட்ட ஊா்க்காவல் படையில் 9 ஆண்கள், 6 பெண்கள் என 15 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற, சேவை மனப்பான்மையுடையவா்கள் விண்ணப்பிக்கலாம். தோ்வு செய்யப்படுபவா்களுக்கு மாதம் ஊதியம் கிடையாது. பணி நாள்களுக்கான தொகுப்பூதியம் மட்டுமே வழங்கப்படும். 45 நாள்கள் நிா்ணயிக்கப்பட்ட இடத்தில் தங்கிப் பயிற்சிபெற வேண்டும்.

இந்தப் பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்த நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை மண்டல தளபதி, ஊா்க்காவல்படை, தலைமை தபால் நிலையம் அருகில், அண்ணா சாலை, வேலூா் என்ற முகவரியில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

அவற்றை பூா்த்தி செய்து 7 நாள்களுக்குள் சமா்ப்பிக்க வேண்டும். தோ்வு செய்யப்படும் நாள் பின்னா் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →