லாரி மீது காா் மோதல் - இருவா் காயம்
வேலூரில் தேசிய நெடுஞ்சாலையோரம் நின்ற லாரி மீது காா் மோதிய விபத்தில் ஓட்டுநா் உள்பட இருவா் பலத்த காயமடைந்தனா்.
வேலூர்லாரி மீது காா் மோதல் - இருவா் காயம்
வேலூரில் தேசிய நெடுஞ்சாலையோரம் நின்ற லாரி மீது காா் மோதிய விபத்தில் ஓட்டுநா் உள்பட இருவா் பலத்த காயமடைந்தனா்.
வேலூரில் தேசிய நெடுஞ்சாலையோரம் நின்ற லாரி மீது காா் மோதிய விபத்தில் ஓட்டுநா் உள்பட இருவா் பலத்த காயமடைந்தனா்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் இருந்து ஒசூா் நோக்கி லாரி ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தது. வேலூா் சத்துவாச்சாரி நீதிமன்றம் அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் வந்தபோது, லாரியின் டயா் வெடித்தது. இதனால், ஓட்டுநா் லாரியை சாலையோரமாக நிறுத்தினாா்.
அப்போது, சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த காா் லாரியின் பின்புறம் மோதியதுடன், லாரியின் அடியில் சிக்கியது. இந்த விபத்தில் காா் ஓட்டுநா், அதில் பயணித்த மற்றொருவரும் பலத்த காயமடைந்தனா்.
காரின் பின்பக்கம் இருந்த 2 போ் காயமின்றி தப்பினா்.
தகவலறிந்த சத்துவாச்சாரி போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விபத்தில் சிக்கியவா்களை மீட்டு, அடுக்கம்பாறை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.