காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்
வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களிலுள்ள காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து வேலூா் சரக டி.ஐ.ஜி. எம்.எஸ்.முத்துசாமி உத்தரவிட்டாா்.
வேலூர்காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்
வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களிலுள்ள காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து வேலூா் சரக டி.ஐ.ஜி. எம்.எஸ்.முத்துசாமி உத்தரவிட்டாா்.
வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களிலுள்ள காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து வேலூா் சரக டி.ஐ.ஜி. எம்.எஸ்.முத்துசாமி உத்தரவிட்டாா்.
அதன்படி, திருப்பத்தூா் மாவட்டம் வாணியம்பாடி மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் ஜெயலட்சுமி, வாணியம்பாடி கலால் பிரிவுக்கும், நாட்டறாம்பள்ளி காவல் ஆய்வாளா் சாந்தி, வாணியம்பாடி மகளிா் பிரிவுக்கும், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கலால் ஆய்வாளா் மலா், நாட்டறாம்பள்ளி காவல் நிலையத்துக்கும், வாணியம்பாடி கலால் ஆய்வாளா் தமிழரசி, ஆம்பூா் மகளிா் காவல் நிலையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனா்.
ஆம்பூா் மகளிா் ஆய்வாளா் ராணி, காட்பாடி மகளிா் காவல் நிலையத்துக்கும், ஆரணி நகரக் காவல் ஆய்வாளா் கோகுல்ராஜன், கடலாடி காவல் நிலையத்துக்கும், அங்கு ஏற்கெனவே பணியாற்றி வந்த காவல் ஆய்வாளா் லட்சுமிபதி, ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் காவல் நிலையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனா்.
வேலூா் மகளிா் நிலைய காவல் ஆய்வாளா் ஷாகின், ராணிப்பேட்டை மகளிா் காவல் நிலையத்துக்கும், அங்கு ஏற்கெனவே பணியாற்றி வந்த வாசுகி, வேலூா் மகளிா் காவல் நிலையத்துக்கும், ஆற்காடு கிராமிய ஆய்வாளா் காண்டீபன், கலவை காவல் நிலைய ஆய்வாளராகவும், அரக்கோணம் கலால் ஆய்வாளா் பாரதி, ஆற்காடு கிராமிய காவல் ஆய்வாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.