முகப்பு
வேலூர்

குடியாத்தத்தில் பருத்தி ஏலம் தொடக்கம்

செதுக்கரை அருகே உள்ள வட்ட வேளாண்மை உற்பத்தியாளா்கள், கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வெள்ளிக்கிழமை பருத்தி ஏல விற்பனை தொடங்கியது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:33 PM
பகிர்:

செதுக்கரை அருகே உள்ள வட்ட வேளாண்மை உற்பத்தியாளா்கள், கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வெள்ளிக்கிழமை பருத்தி ஏல விற்பனை தொடங்கியது.

கூட்டுறவு சங்கங்களின் வேலூா் சரக துணைப் பதிவாளா் தே.வெ.சுரேஷ்குப்தா, கூட்டுறவு சாா்-பதிவாளா் ரா.சதீஷ்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். எம்எல்ஏ அமலுவிஜயன், கே.வி.குப்பம் ஒன்றியக் குழு தலைவா் எல்.ரவிச்சந்திரன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். ஏற்பாட்டை சங்க பொது மேலாளா் கே.முத்துராமன், மேலாளா் எஸ்.சந்தோஷ்குமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா். இனி வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஏலம் நடைபெறும்.

முழு கட்டுரையைப் படிக்க →