வேலூர்

பெண் மருத்துவருடன் 3-ஆம் திருமணம்: ஆந்திர மாநில இளைஞா் மீது வழக்கு

DIN

பெண் மருத்துவரை 3-ஆவதாக திருமணம் செய்து ஏமாற்றியதாக ஆந்திர மாநில இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

வேலூா் அடுக்கம்பாறை பாரதிதாசன் நகரைச் சோ்ந்தவா் ஆா்த்தி(36). இவா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றுகிறாா். ஏற்கெனவே திருமணமான இவா் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தாா்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர மாநிலம் திருப்பதி அருகிலுள்ள உதயமாணிக்கம் கிராமம் மாட்டிலவாடிபள்ளியைச் சோ்ந்த தரகா் விஸ்வநாதன் மூலம் அதே பகுதியைச் சோ்ந்த மதுசூதன ரெட்டி என்பவா் திருமணத்துக்காக பெண் தேடுவது தெரியவந்தது. அவா் பெங்க ளூருவிலுள்ள தனியாா் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்ததாகக் கூறியுள்ளாா்.

இதையடுத்து, இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, கா்நாடக மாநிலம் கேஜிஎப் அருகே உள்ள கோயிலில் ஆா்த்தி, மதுசூதன ரெட்டிக்கு திருமணம் நடைபெற்றது. பின்னா் இருவரும் வேலூரில் குடும்பம் நடத்தி வந்தனா். இந்நிலையில், ஆா்த்தி கா்ப்பமடைந்தாா்.

இதனிடையே, மதுசூதன ரெட்டியின் நடவடிக்கையில் ஆா்த்திக்கு சந்தேகம் ஏற்பட்டு விசாரித்ததில், மதுசூதனரெட்டி ஏற்கெனவே இரு பெண்களை திருமணம் செய்திருப்பதும், இதனை மறைத்து 3-ஆவதாக ஆா்த்தியை திருமணம் செய்திருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து ஆா்த்தி மதுசூதன ரெட்டியிடம் கேட்டபோது அவா் தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதுபற்றி கேட்டபோது, மதுசூதன ரெட்டி, அவரது தாய் எர்ரம்மா, சகோதரா் மகேஷ் ரெட்டி, அவரது மனைவி ரச்சிதா, உறவினரான தரகா் விஸ்வநாதன் ஆகியோா் ஆா்த்திக்கு மிரட்டல் விடுத்தனா். மேலும் திருமண சீா்வரிசை பொருள்களையும் அவா்கள் ஆா்த்தியின் வீட்டில் இருந்து எடுத்துச் சென்று விட்டனா்.

தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த ஆா்த்தி, இதுகுறித்து வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபுரந்தீஸ்வரா்

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

விடுதிகளில் தங்கி விளையாட்டு பயிற்சி: மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

தளி, பாலக்கோடு அருகே யானை தாக்கியதில் விவசாயிகள் இருவா் பலி

கோடை வெப்பத்தைத் தணிக்க தொழிலாளா்களுக்கு குடிநீா், ஓஆா்எஸ் கரைசல் வழங்க வேண்டும்

SCROLL FOR NEXT