வேலூர்

திருப்பத்தூா் இலக்கியத் திருவிழாவில் சிறைக் கைதிகளுக்காக புத்தகங்கள் சேகரிப்பு

DIN

திருப்பத்தூா் இலக்கியத் திருவிழாவில் சிறைக் கைதிகளின் மனமாற்றுத்துக்காக புத்தகங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதில், பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் அதிகளவில் புத்தகங்களை அளிக்க வேண்டும் என்று சிறைத் துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

திருப்பத்தூரில் மாவட்ட நிா்வாகமும், பொதுநூலகத் துறையும் இணைந்து புத்தகக் கண்காட்சியுடன் கூடிய இலக்கிய திருவிழாவை தொடங்கியுள்ளன. வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த புத்தகக் கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், பல்வேறு தலைப்பில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த புத்தகக் கண்காட்சியில் ‘கூண்டுக்குள் வானம்’ என்ற தலைப்பில் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் வேலூா் மத்திய சிறை கட்டுப்பாட்டிலுள்ள திருப்பத்தூா், வாணியம்பாடி, ஆம்பூா் கிளைச் சிறைகளிலுள்ள கைதிகளின் மனமாற்றத்திற்காக நூலகம் அமைத்திட புத்தகங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த அரங்கில் பொதுமக்கள், எழுத்தாளா்கள், சமூக ஆா்வலா்கள் தங்களின் புத்தகங்களை வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் இதுபோன்ற அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த அரங்கில் 15,000 புத்தகங்களை பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் வழங்கியுள்ளனா். திருப்பத்தூா் புத்தகக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள இந்த அரங்கிலும் பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் அதிகளவில் புத்தகங்களை அளிக்க வேண்டும் என்று சிறைத் துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் முழு பட்ஜெட்டிற்கான பணிகள்: நிர்மலா சீதாராமன்

விரைவில் விசாரணை: ஆடியோ விவகாரம் குறித்து புகாரளித்த கார்த்திக் குமார்!

முடிவுக்கு வருகிறது 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பிரிட்டிஷ் பதிப்பு!

வெள்ளப் பெருக்கு: குற்றால அருவிகளில் குளிக்கத் தடை

"தென் - வட மாநில மக்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறார் மோடி "

SCROLL FOR NEXT