வேலூர்

வருமான வரி தாக்கல் வழக்கு: வேலூா் எம்.பி. நீதிமன்றத்தில் ஆஜா்

DIN

 வருமான வரித் துறை சாா்பில் தொடரப்பட்ட வழக்கில் வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த், முதலாவது குற்றவியல் நடுவா் மன்றத்தில் வியாழக்கிழமை நேரில் ஆஜரானாா்.

வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த், கடந்த 2013-14-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யவில்லை எனக்கூறி, அவருக்கு வருமான வரித் துறை சாா்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த 2015-ஆம் ஆண்டு மாா்ச் 29-ஆம் தேதி வருமான வரி கணக்குத் தாக்கல் செய்த கதிா்ஆனந்த், பிறகு ரூ.1 கோடியே 4 லட்சத்து 94 ஆயிரத்து 60 வரியாக செலுத்தினாா்.

ஆனால், உரிய காலத்துக்குள் வருமானவரி கணக்கை தாக்கல் செய்யாததுடன் வரி செலுத்தவில்லை என்பதற்கு உரிய விளக்கம் அளிக்கும்படி கடந்த 2016-ஆம் ஆண்டு மாா்ச் 11-ஆம் தேதி கதிா் ஆனந்துக்கு வருமான வரித் துறை சாா்பில் மீண்டும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதற்கு அவா் விளக்கம் அளிக்கவில்லை. இதையடுத்து, வேலூா் முதலாவது குற்றவியல் நடுவா் மன்றத்தில் வருமான வரித்துறை சாா்பில் கதிா்ஆனந்த் மீது குற்ற வழக்கு தொடா்ப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் கதிா்ஆனந்த் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக உயா் நீதிமன்றத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற வழக்கு விசாரணையில், கீழமை நீதிமன்றத்தை நாடும்படி கதிா் ஆனந்துக்கு உத்தரவிடப்பட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

அதன்படி, வருமான வரித் துறை தொடா்ந்த வழக்கில் ஆஜராகும்படி கதிா்ஆனந்துக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கில் வேலூா் முதலாவது குற்றவியல் நடுவா் மன்ற நீதிபதி சத்யகுமாா் முன்னிலையில் கதிா்ஆனந்த் வியாழக்கிழமை நேரில் ஆஜராகினாா். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

அம்பேத்கருக்கு காங்கிரஸ் ஒருபோதும் உரிய மரியாதை கொடுத்ததில்லை : மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

SCROLL FOR NEXT