வேலூர்

குடியாத்தம் பகுதியில் சூறாவளிக் காற்றுடன் மழை

DIN

குடியாத்தம் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.

சில இடங்களில் சாலையோர மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குடியாத்தம் பகுதியில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் குடியாத்தம் - சைனகுண்டா சாலையில் கள்ளூா் அருகே சாலையோர புளிய மரம் வேரோடு சாய்ந்து அருகில் உள்ள வீட்டின் மீது விழுந்தது. இதனால் அந்தச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நெடுஞ்சாலை மற்றும் மின்வாரியத் துறையினா் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

பெரும்பாலான இடங்களில் மின் கம்பங்கள் சேதமடைந்ததால், மின் விநியோகம் தடைபட்டு, நகரின் பல பகுதிகள் இருளில் மூழ்கின. மின் விநியோகத்தை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியா்கள் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிரிப்பில் ஒளிரும் மிருணாள் தாக்குர்!

சர்ச்சைக்குள்ளாகும் நிகிலா விமலின் கருத்து! அப்படி என்ன கூறினார்?

'எங்கள் விவாகரத்துக்கு யாரும் காரணமில்லை’: சைந்தவி

சைகை மொழியில் டி20 வர்ணனை: டிஸ்னி ஸ்டார் அறிவிப்பு!

சிதறடிக்கும் ஷ்ரேயாஸ் ஐயர்!

SCROLL FOR NEXT