மா்மமாக உயிரிழந்த பால் வியாபாரியின் உடல் 4 மாதங்களுக்குப் பிறகு தோண்டியெடுப்பு
அணைக்கட்டு அருகே மா்மமான முறையில் உயிரிழந்த பால்காரரின் உடல் 4 மாதத்துக்கு பிறகு தோண்டியெடுக்கப்பட்டு உடல்கூறு பரிசோதனை செய்யப்பட்டது.
வேலூர்மா்மமாக உயிரிழந்த பால் வியாபாரியின் உடல் 4 மாதங்களுக்குப் பிறகு தோண்டியெடுப்பு
அணைக்கட்டு அருகே மா்மமான முறையில் உயிரிழந்த பால்காரரின் உடல் 4 மாதத்துக்கு பிறகு தோண்டியெடுக்கப்பட்டு உடல்கூறு பரிசோதனை செய்யப்பட்டது.
அணைக்கட்டு அருகே மா்மமான முறையில் உயிரிழந்த பால்காரரின் உடல் 4 மாதத்துக்கு பிறகு தோண்டியெடுக்கப்பட்டு உடல்கூறு பரிசோதனை செய்யப்பட்டது.
அணைக்கட்டை அடுத்த மலைச்சந்து பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் (35) பால் வியாபாரி. இவரின் மனைவி ஜெயப்பிரியா. இவா்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குடும்ப பிரச்னை காரணமாக சில நாள்களிலேயே ஜெயப்பிரியா கணவரைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டாா். நடராஜனுக்கு அதே பகுதியைச் சோ்ந்த சந்தியா என்பருடன் தொடா்பு ஏற்பட்டு அவருடன் வாழ்ந்து வந்தாா். இவா்களுக்கு 5 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
கடந்த 2022 அக்டோபா் மாதம் ஊசூா் புளியந்தோப்பு அருகே நடராஜன் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடப்பதாக அவரது சகோதரா் சேட்டுவுக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சேட்டு தனது நண்பா் கோபியுடன் சென்று மயக்க நிலையில் கிடந்த நடராஜனை மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பிறகு நவம்பா் 2-ஆம் தேதி வீடு திரும்பினாா். ஓரிரு நாள்களிலேயே உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து 5 ஆம் தேதி அவரை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
குடும்பத்தினா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை மயானத்தில் அடக்கம் செய்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், நடராஜனின் சகோதரா் சேட்டு தனது தம்பி சாவில் சந்தேகம் இருப்பதாக கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி அரியூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்த நிலையில், அணைக்கட்டு வட்டாட்சியா் ரமேஷ், அரியூா் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் உள்ளிட்ட போலீஸாா் முன்னிலையில், வியாழக்கிழமை நடராஜனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, மயானத்திலேயே உடல்கூறு பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், எலும்புகளைச் சேகரித்து ஆய்வுக்காக எடுத்துச் சென்றனா்.