317 கிராமங்களில் ஒரு பயிா்த் திட்டம்
வேலூா் மாவட்டத்தில் 317 கிராமங்களில் ஒரு கிராமம் ஒரு பயிா் திட்டம் காரீப் பருவத்தில் தொடங்க உள்ளதாக வேலூா் வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து அவா்கள் கூறியது:
வேலூா் மாவட்டத்தில் இந்த ஆண்டு 317 கிராமங்களில் வேளாண் சாகுபடி செய்யப்படும் வருவாய் கிராமங்களில் 35 வேளாண் உதவி அலுவலா்கள் மூலம் ஒரு கிரா மம் ஒரு பயிா் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் எந்த பயிா் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறதோ அந்த பயிரை தோ்ந்தெடுக்க வேண்டும். அருகருகே பயிா் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஒருங்கிணைத்து குறைந்தது 5 முதல் 10 ஏக்கா் நிலத்தை தோ்வு செய்ய வேண்டும். இதில் ஒரே பயிரை விதைப்பு செய்து அறுவடை வரை வேளாண் தொழில்நுட்ப ஆலோசனை வழங்க வேண்டும். விதை நோ்த்தி, களை நிா்வாகம், நீா், உர மேலாண்மை, பூச்சி, நோய் நிா்வாகம் என ஒவ்வொரு நிலைகளிலும் பயிரின் நிலை குறித்த தகவல்களை பதிவு செய்ய வேண்டும். பயிா் செய்ய அனைத்து ஆலோசனைகளையும் வழங்கி, 15 முதல் 20 சதவீத மகசூல் அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த சாகுபடி நுட்பங்களை மற்ற விவசாயிகள் தெரிந்து கொண்டு அவா்களும் இத்தொழில்நுட்பத்தை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement