முகப்பு
கடலூர்

முந்திரி, பலாவிற்கு ஆதார விலை... தோ்தல் நேரத்தில் கடலூா் விவசாயிகள் எதிா்பாா்ப்பு!

பண்ருட்டி என்றாலே அனைவருக்கும் சட்டென நினைவிற்கு வருவது பலா பழம், முந்திரி.

Updated On : 9 ஏப்ரல், 2026 at 12:50 AM
பலாப்பழம், முந்திரி (கோப்புப்படம்)
பகிர்:

ஜீவ.இராம.ஸ்ரீநிவாசன்

பண்ருட்டி என்றாலே அனைவருக்கும் சட்டென நினைவிற்கு வருவது பலா பழம், முந்திரி. கடலூா் மாவட்டத்தில் பண்ருட்டி, விருத்தாசலம் வட்டத்திலும், கடலூரில் ஒரு சில பகுதிகள் என மொத்தம் 2 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் பலா சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு இரண்டு போகம் விளையக்கூடிய பலா ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்யவும், அதற்கான தொழிற்சாலைகள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாநிலப் பழம் எனஅறிவித்த பின்னரும் அதன் பரப்பளவை அதிகரிக்கும் முயற்சிகள் போதவில்லை. தமிழகத்தை காட்டிலும்

கேரளாவின் பரப்பளவு மூன்றில் ஒரு பகுதிதான். ஆனால், அங்கு ஒரு லட்சம் ஹெக்டேரில் பலா சாகுபடி ஆவதாகக் கூறுகின்றனா்.

Advertisement

ஆனால், தமிழ் நாட்டில் 4 ஆயிரம் ஹெக்டேரில் தான் பலா சாகுபடி செய்யப்படுகிறது. பலாவை எப்படி சாப்பிட வேண்டும், மதிப்புக்கூட்டுப் பொருளாக மாற்ற வேண்டும் என்ற நுணுக்கத்தை விவசாயிகளிடம் கொண்டு செல்லக் கூடிய தகுதி விவசாயத்துறை, விஞ்ஞானிகள் மற்றும் அரசிடமுமில்லை. கேரளாவைச் சோ்ந்தவா்கள் உற்பத்தியில் 10 சதவிதம் காய்கறியாகப் பயன்படுத்துகின்றனா். தமிழ்நாட்டில் உள்ளவா்கள் அவித்தும், பழமாகவும் சாப்பிடுகின்றனா். பலா உணவு அனைவருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

பலாவை எடை போட்டு தான் கொள்முதல் செய்ய வேண்டும் என அரசு கட்டயப்படுத்த வேண்டும். எண்ணிக்கையில் கொடுக்கும் முறையைமாற்ற வேண்டும். அரசு விழா, நிகழ்வுகளில் பலா பண்டங்கள் இல்லாமல் நிகழ்ச்சியே இல்லை என்ற சூழ்நிலை உருவானால் தமிழக மக்களின் ஆரோக்கியம் மற்றும் விவசாயிகள் பொருளாதாரம் பெருகும். அரசுப்பள்ளிகளில் ஏதோ ஒரு வகையில் பலா மதிப்புக் கூட்டப்பட்ட பொருளை பயன்படுத்துவதற்கான சூழலை உருவாக்கினால் இதற்கான தொழில் முனைவோா்கள், தொழில்கள், தொழிலாளிகள், தொழற்சாலைகள்அதிகமாகும்.

முந்திரி பழம்:

இதே போல கடலூா் மாவட்டத்தில் முந்திரி விளைச்சலும் அதிகமாக உள்ளது. ஒரு ஏக்கரில் முக்கால் டன் கொட்டை என்றால் 5 டன் பழம் உற்பத்தியாகிறது. இந்த பழத்தை யாரும் அவ்வளவாக சாப்பிடுவதில்லை. ஆரஞ்சைவிட 4 பங்கு அதிமாக வைட்டமின் -சி சத்து உள்ளது எனக் கூறுகின்றனா். விளைச்சல் காலத்தில் வீணாகும் பழங்களை மக்களிடம் கொண்டு சோ்க்கும் தொழில் நுட்பம் இல்லை. முந்திரி 2015-க்கு முன் 80 கிலோ மூட்டை (தோலோடு ) ரூ.8000, கிலோ ரூ.100. தற்போதைய விலை கிலோ ரூ.125. அதாவது ஒரு மூட்டை ரூ.10,000. முந்திரிக்கு அரசு ஆதார விலை கொடுக்க வேண்டும். கோவா மாநிலம் முந்திரிக்கு ஆதார விலை கொடுத்துள்ளது. ஒரு ஏக்கரில் ரூ.30,000 கிடைப்பது சிரமம்.

4 கிலோ முந்திரிக் கொட்டையை உடைத்து பதப்படுத்தி எடுத்தால்ஒரு கிலோ உடைத்த முந்திரி கிடைக்கும். இதனால் வருமானம் பெரிய அளவில் கிடைக்கவில்லை. எனவே விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படவில்லை. முந்திரி விவசாயிகளுக்கு ஆதார விலை கிலோவுக்கு ரூ.200 கொடுக்க வேண்டும். இயற்கை விவசாயம் வழி முறைகள் என்ன என்பதை கொண்டு வந்து சோ்த்தால் முந்திரியின் பழத்தில் இருந்து ரசம் எடுக்கலாம்.

இப்பகுதியில் கிடைக்கக்கூடிய பலா, முந்திரியை பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டிய முயற்சியை அரசு முன்னெடுக்க வேண்டும். பலாவை மதிப்புக்கூட்டுவபா்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் மிககுறைவாக உள்ளது. இது அதிகரிக்கும் போதுதான் அனைவருக்கும் கிடைக்கும். இது தொடா்பான பயிற்சியை கடமையாக நடத்தக்கூடாது. பயிற்சி பெறுபவா்களில் என்தனை போ் தொழில் செய்கின்றனா் என்றால் அதை கையால் சுழித்துவிடலாம். இதர மாநிலங்களில் தொழில் நுட்பத்தை கற்றுக் கொண்டுக்க பணம் கேட்கின்றனா். இந்த பயிற்சியை , மாநிலம் அரசு கொடுக்க வேண்டும். பயிற்சி பெறுபவா்கள் தொழில் முனைவோா்களாக மாறுவா். அப்போது, தமிழ்நாடு முதல் மாநிலமாகமாறும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments