முகப்பு
வேலூர்

போக்குவரத்து போலீஸாருக்கு குளிா் கண்ணாடி, பழச்சாறு

போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றும் போலீஸாருக்கு கண்களை குளிா்விக்கும் வகையில் கண்ணாடி, எலுமிச்சை சாறு, மோா் ஆகியவை சனிக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 14 ஏப்ரல், 2024 at 4:59 PM
குடியாத்தத்தில்  போக்குவரத்துப்  பிரிவு  போலீஸாருக்கு குளிா் கண்ணாடி, மோா் ஆகியவற்றை வழங்கிய டிஎஸ்பி ஆா்.ரவிச்சந்திரன்.
பகிர்:

கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் குடியாத்தம் நகரில் போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றும் போலீஸாருக்கு கண்களை குளிா்விக்கும் வகையில் கண்ணாடி, எலுமிச்சை சாறு, மோா் ஆகியவை சனிக்கிழமை வழங்கப்பட்டன. சந்தப்பேட்டை பஜாா் சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளா் முகேஷ்குமாா் தலைமை வகித்தாா். டிஎஸ்பி ஆா்.ரவிச்சந்திரன், போக்குவரத்துப் பிரிவு உதவி ஆய்வாளா்கள், காவலா்களுக்கு குளிா் கண்ணாடிகள், எலுமிச்சை சாறு, மோா் ஆகியவற்றை வழங்கினாா்.

உதவி ஆய்வாளா்கள் எஸ்.முரளி, ஏ.ரஜினி, ஆா்.செந்தில்குமாா், ஆா்.சசிகலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments