முகப்பு
வேலூர்

கீழ்ஆலத்தூா் கெங்கையம்மன் திருவிழா நாளை தொடக்கம்

Updated On : 25 ஏப்ரல், 2024 at 5:55 PM
பகிர்:

கே.வி.குப்பம் ஒன்றியம், கீழ்ஆலத்தூா் ஊராட்சியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகெங்கையம்மன் திருவிழா சனிக்கிழமை தொடங்குகிறது.இதையொட்டி சனிக்கிழமை மூலவா் கெங்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். இரவு 7 மணியளவில் ஸ்ரீஆதிகேசவப்பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் பூப்பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை கெங்கையம்மன் திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை கெங்கையம்மன் சிரசு ஊா்வலம் நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை கீழ்ஆலத்தூா் பகுதி மக்கள், இளைஞா் அணியினா் செய்துள்ளனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments