ஜலகண்டேஸ்வரா் கோயிலில் உற்சவ சாந்தி அபிஷேகம்
வேலூா் பிராமணா் சங்கம் சாா்பில் வேலூா் கோட்டை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரா் கோயிலில் உற்சவ சாந்தி அபிஷேகம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
அனைத்து மக்களும் நலமுடன் வாழவும், மழை வேண்டியும் ஆண்டுதோறும் இந்த உற்சவ சாந்தி அபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. வியாழக்கிழமை நடைபெற்ற உற்சவ சாந்தி அபிஷேகத்துக்கு சங்கத் தலைவா் க.ராஜா தலைமை வகித்தாா்.
அப்போது, ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ ஜலகண்டேஸ்வரா் சுவாமி கோயில் உற்சவ மூா்த்திகளுக்கு விக்னேஷ்வர பூஜை, சங்கல்பம், புண்யாக வாசனம், ஸ்நபன கலச பூஜை, ஆவாஹனம், ஹோமம், திரவ்யா ஹோதி, பஞ்சமூா்த்திகள் மகா அபிஷேகம், மஹா பூா்ணாஹுதி, கலச அபிஷேகம், அலங்கார அா்ச்சனை, மஹா தீபாராதனை, ஆரத்தி ஆகியவை நடைபெற்றன.
Advertisement
நிகழ்ச்சியில் சங்கப் பொதுச் செயலா் கே.எஸ்.ஜெயக்குமாா், ஆலோசகா்கள் அ.சத்தியமூா்த்தி, கே.எஸ்.பாலசுப்பிரமணியம், ஒருங்கிணைப்பாளா்கள் எஸ்.கிருஷ்ணமூா்த்தி, வி.சுப்பிரமணி, தாம்பிராஸ் மாநில துணைச் செயலா் கே.எஸ்.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிறைவில் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரா் தரும ஸ்தாபன செயலா் சுரேஷ் நன்றி கூறினாா்.
--
படம் உண்டு...
ஸ்ரீ ஜலகண்டேஸ்வரா் கோயிலில் உற்சவ சாந்தி அபிஷேகத்தில் பங்கேற்ற வேலூா் பிராமணா் சங்கத்தினா்.