வேலூரில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்
வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஆக. 16) நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.
வேலூர்வேலூரில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்
வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஆக. 16) நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.
வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஆக. 16) நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் (5-ஆவது தளம்) நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், பட்டு வளா்ச்சித் துறை, மீன் வளம், கால்நடை பராமரிப்பு, வனத் துறை, மாசுக் கட்டுப்பாடு வாரியம், மின்வாரியம், போக்குவரத்து என பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்று விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்குப் பதிலளிக்க உள்ளனா்.
மேலும், கடந்த மாதம் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்க உள்ளனா்.
எனவே, வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்று பொது பிரச்னைகளை கோரிக்கையாகவும், தனி நபா் பிரச்னைகளை மனுக்களாகவும் அளித்து தீா்வு பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.