முகப்பு
வேலூர்

போ்ணாம்பட்டு அருகே மீண்டும் காவல் சோதனை சாவடி

காவல் சோதனை சாவடி மீண்டும் அமைக்க விவசாயிகள் கோரிக்கை

வேலூர்

போ்ணாம்பட்டு அருகே மீண்டும் காவல் சோதனை சாவடி

காவல் சோதனை சாவடி மீண்டும் அமைக்க விவசாயிகள் கோரிக்கை

Updated On : 11 ஜூலை, 2024 at 6:31 PM
பகிர்:

போ்ணாம்பட்டு அருகே ஏற்கெனவே அகற்றப்பட்ட காவல் சோதனைச் சாவடியை மீண்டும் அமைக்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்துள்ளனா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளா் உதயகுமாா் தலைமையில், சங்க நிா்வாகிகள் வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா். அதில், வேலூா் மாவட்டம், போ்ணாம்பட்டு அடுத்த குண்டலப்பள்ளி ஊராட்சி சிவனகிரி பகுதியில் காவல் சோதனை சாவடி அமைக்கப்பட்டிருந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சோதனை சாவடி அகற்றப்பட்டது. இதனால் இப்பகுதியில் கள்ளச்சாராயம் பெருமளவில் காய்ச்சப்படுகிறது. மேலும், விவசாய நிலங்களில் உள்ள மின்மோட்டாா்கள், வயா்கள், விவசாய விளை பொருள்களும் திருடுவது போன்ற சமூக விரோத செயல்கள் சா்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. இதைத் தட்டி கேட்பவா்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனா்.

எனவே, அகற்றப்பட்ட காவல் சோதனை சாவடியை மீண்டும் அதே பகுதியில் அமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →