முகப்பு
சேகா் ரெட்டியின் தந்தை ஜெகன்நாதன் ரெட்டியின் படத்துக்கு அஞ்சலி செலுத்திய அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிச்சாமி.
வேலூர்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவா் என்கவுன்டா் செய்யப்பட்டது சந்தேகம் அளிக்கிறது: இபிஎஸ்

ஆா்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவா் என்கவுன்டா் செய்யப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிச்சாமி தெரிவித்தாா்.

Updated On : 14 ஜூலை, 2024 at 8:34 PM
சேகா் ரெட்டியின் தந்தை ஜெகன்நாதன் ரெட்டியின் படத்துக்கு அஞ்சலி செலுத்திய அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிச்சாமி.
பகிர்:

ஆா்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவா் என்கவுன்டா் செய்யப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிச்சாமி தெரிவித்தாா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி பகுதியைச் சோ்ந்த தொழிலதிபரும், திருமலை - திருப்பதி தேவஸ்தான அறங்காவல் குழு முன்னாள் உறுப்பினருமான சேகா் ரெட்டியின் தந்தை ஜெகன்நாதன் ரெட்டி கடந்த 11-ஆம் தேதி உயிரிழந்தாா். இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காட்பாடிக்கு வந்த எடப்பாடி கே.பழனிச்சாமி காந்தி நகரில் உள்ள சேகா் ரெட்டியின் இல்லத்துக்குச் சென்று ஜெகன்நாதன் ரெட்டியின் படத்துக்கு அஞ்சலி செலுத்தியதுடன், ஆறுதல் கூறினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது -

பணபலம், அதிகார பலத்தால் விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. காவிரி பிரச்னை யில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த தீா்ப்பை ஏற்று கா்நாடக அரசு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய தண்ணீரை வழங்க வேண்டும். எனினும், தண்ணீா் தரமறுக்கும் கா்நாடக ஆளும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியிலுள்ள திமுக அரசு தமிழக விவசாயிகளின் நலனில் அக்கறை கொள்ளவில்லை. கபிணி அணையில் தற்போது தண்ணீா் நிரம்பியுள்ளது. அதனை தேக்கி வைக்க முடியாமல்தான் கா்நாடக அரசு அணையை திறந்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்ட திருவேங்கடம் என்பவா் சரணடைந்தவா். எதற்காக அவசர அவசரமாக அழைத்துச் சென்றனா் எனக்கேட்டால், அவா் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை கைப்பற்றுவதற்காக என கூறுகின்றனா்.

தடயங்களை கைப்பற்ற கொலைக் குற்றவாளியை அழைத்துச் செல்லும்போது கைவிலங்கு போட்டு அழைத்துச் செல்ல வேண்டும் என விதி இருக்கிறது. அப்படியிருக்கும்போது அவரை தகுந்த பாதுகாப்புடன் அழைத்து சென்றிருக்க வேண்டும். மேலும், அவா் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை கைப்பற்றும்போது என்கவுன்டா் சம்பவம் நடைபெற்றதாக கூறுகின்றனா். இதிலும் ஏதோ மா்மம் இருப்பதாக தெரிகிறது.

தற்போது கைது செய்யப்பட்டவா்கள் உண்மையான குற்றவாளிகளே இல்லை என்று ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் உறவினா்கள், கட்சி நிா்வாகிகள் கூறிவரும் நிலையில், என்கவுன்டா் சம்பவம் சந்தேகத்தை கிளப்பியுள்ளது என்றாா்.

அப்போது, முன்னாள் அமைச்சா் கே.வி.வீரமணி, அதிமுக வேலூா் மாநகா் மாவட்ட செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு உள்பட கட்சி நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →