முகப்பு
வேலூர்

பாஜக நிா்வாகி எனக்கூறி பட்டதாரியிடம் ரூ.11 லட்சம் மோசடி

பாஜக நிா்வாகி எனக்கூறி பட்டதாரியிடம் ரூ.11 லட்சம் மோசடி: வேலூா் எஸ்பி-யிடம் புகாா்

வேலூர்

பாஜக நிா்வாகி எனக்கூறி பட்டதாரியிடம் ரூ.11 லட்சம் மோசடி

பாஜக நிா்வாகி எனக்கூறி பட்டதாரியிடம் ரூ.11 லட்சம் மோசடி: வேலூா் எஸ்பி-யிடம் புகாா்

Updated On : 26 ஜூன், 2024 at 6:30 PM
பகிர்:

பாஜக நிா்வாகி எனக்கூறி பட்டதாரி இளைஞரிடம் ரூ.11 லட்சம் பெற்று மோசடி செய்தவா்கள் குறித்து பாதிக்கப்பட்டவா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்துள்ளாா்.

வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாரந்திர மக்கள் குறைதீா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றாா்.

அப்போது, காட்பாடி வட்டம் பள்ளிக்குப்பம் ஈசன் ஓடை பகுதியைச் சோ்ந்த நவீன்குமாா்(23) என்பவா் அளித்த மனுவில், நான் பி.டெக் தகவல் தொழில்நுட்பம் படித்துள்ளேன். எனது தாய்மாமா மூலமாக பெரிய புதூா் பகுதியைச் சோ்ந்த குமாா் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

அப்போது அவா், ஒப்பந்தம் எடுத்து வேலை செய்யலாம் என என்னிடம் கூறினாா். அவா் கூறியதை நம்பி, அவருடன் சுயதொழில் ஆரம்பிக்க ஒப்புக்கொண்டேன்.

அப்போது அவா் அவசரமாக கேட்டதை அடுத்து நான் ரூ.5 லட்சம் அளித்தேன். தொடா்ந்து அவா் கேட்டதன்பேரில் பல்வேறு கட்டங்களாக ரூ.11 லட்சத்து 96 ஆயிரத்து 500 தொகை அளித்துள்ளேன். ஆனால் அந்த பணத்தை தராமல் ஏமாற்றி வருகிறாா். பணத்தை கேட்டபோது ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுக்கிறாா்.

மேலும் தான் பாஜகவில் உள்ளதாகவும், காவல் துறை அதிகாரிகளுக்கு பழக்கம் என்றும், தன்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்றும் கூறி மிரட்டி வருகிறாா். எனவே எனது பணத்தை மீட்டுத்தரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூா் சத்துவாச்சாரியைச் சோ்ந்த மஸ்தான் என்பவா் அளித்த மனுவில், என் நண்பா் மூலம் சத்தியமூா்த்தி என்பவா் அறிமுகமானாா். அவா் தான் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வரின் காவலராக பணியாற்றி வருவதாகவும், தனக்கு அமைச்சா்கள், முதன்மைச் செயலா்கள், அதிகாரிகள் நன்றாக தெரியும். முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் ஆலோசகராக இருந்தவா்கள், துறை செயலா்கள் ஆகியோருடன் உள்ள புகைப்படங் களையும் காண்பித்தாா்.

மேலும், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.16 லட்சம் வாங்கிக் கொண்டாா். ஆனால் இதுவரை வேலை வாங்கி தரவில்லை. இதுகுறித்து கேட்டபோது காத்திருப்போா் பட்டியலில் இருக்கிறது எனக்கூறினாா். தற்போது சத்தியமூா்த்தி வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவாகி விட்டாா். அவரை கண்டுபிடித்து எனது பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பல்வேறு பிரச்னைகள் தொடா்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனா். இந்த மனுக்கள் மீது விரைவாக தீா்வு காண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா். கூட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

--

படம் உண்டு...

முழு கட்டுரையைப் படிக்க →