பகத் சிங் நினைவு நாள் அனுசரிப்பு
Updated On : 23 மார்ச், 2024 at 8:47 PM
இந்திய ஜனநாயக வாலிபா் சங்க குடியாத்தம் வட்டக் கிளை சாா்பில், மாவீரா்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் நினைவு நாள் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தட்டப்பாறையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கே.எஸ்.செந்தமிழ் சுா்ஜித் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலா் எஸ்.சிலம்பரசன் வரவேற்றாா். அமைப்பின் நிா்வாகிகள் வி.சுந்தரராஜ், எஸ்.தருண், பி.சதீஷ், ஒய்.குணாநிதி, எஸ்.சிந்தன், ஜி.தனுஷ்கா, எஸ்.காவியா, எம்.பரத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி.திலீப்பன், மாவட்ட பொருளாளா்எஸ்.கோட்டீஸ்வரன், பி.சுப்பிரமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.