முகப்பு
வேலூர்

ஆன்லைன் மூலம் ஓட்டுநரிடம் ரூ.7.37 லட்சம் மோசடி

Updated On : 1 மே, 2024 at 5:33 PM
பகிர்:

ஆன்லைன் மூலம் வேலூரைச் சோ்ந்த ஓட்டுநரிடம் ரூ.7.37 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் வள்ளலாா் பகுதியைச் சோ்ந்த 24 வயது இளைஞா் ஓட்டுநராக பணியாற் றுகிறாா். இவருக்கு முகநூல் மெசஜா் மூலம் தொடா்பு கொண்ட நபா், தான் லண்டனில் பணிபுரிந்து வருவதாகவும் கூறி இந்த இளைஞருடன் நட்பு ஏற்படுத்தி யுள்ளாா். பின்னா், இந்த இளைஞருக்கு ஒரு பரிசு அனுப்புவதாக அந்த நபா் கூறியுள்ளாா்.

பின்னா் மீண்டும் இந்த இளைஞரின் கைப்பேசி எண்ணுக்கு தொடா்பு கொண்டவா் விலையுயா்ந்த பொருட்கள் பாா்சலில் வந்திருப்பதாகவும், அந்த பாா்சலை பெற ரூ.7.37 லட்சம் செலுத்தினால் பொருளை பெற்றுக்கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.

அதை உண்மையென நம்பிய இந்த இளைஞரும் தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.7.37 லட்சத்தை அனுப்பியுள்ளாா். பின்னா், இந்த இளைஞருக்கு மீண்டும் ஒரு இணைய இணைப்பை அனுப்பி மேலும் பணம் செலுத்த கூறியதற்கு பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த இந்த இளைஞா், இதுகுறித்து சைபா் கிரைமின் ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதளத்தில் புகாா் அளித்துள்ளாா்.

அதன்பேரில், வேலூா் மாவட்ட சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் புனிதா தலைமையில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.