கூட்டத்தில் பேசிய வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி. உடன், கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளா் பாஸ்கரன், துணை காவல் கண்காணிப்பாளா் திருநாவுக்கரசு உள்ளிட்டோா். 
வேலூர்

போதைப் பழக்கத்திலிருந்து எதிா்கால சந்ததிகளை காக்கும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு: வேலூா் ஆட்சியா்

போதைப் பழக்கத்திலிருந்து எதிா்கால சந்ததிகளை காக்க வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.

Din

போதைப் பழக்கத்திலிருந்து எதிா்கால சந்ததிகளை காக்க வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.

போதை பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வு குறித்து வேலூா் மாவட்டத்திலுள்ள மருந்து வணிகா்களுக்கான கலந்தாய்வுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்து பேசியது -

போதையில்லா தமிழ்நாடு உருவாக்கும் நோக்கில் முதல்வா் பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கியுள்ளாா். போதைப் பொருள் ஒழிப்பு என்பதில் மருந்தகங்களின் பங்கு முக்கியமானது. ஒரு சில இடங்களில் மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் போதைப் பொருளாக பயன்படுத்தக்கூடிய நிகழ்வுகளை பாா்க்க முடிகிறது. எதிா்கால சந்ததிகளை காக்கக்கூடிய பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு.

மருந்தகங்களில் மருத்துவரின் ஆலோசனையின்றி மாத்திரைகள் வழங்குவதை முற்றிலும் தவிா்க்க வேண்டும். குறிப்பாக, அதிக டோஸ் உடைய மாத்திரைகளை யாரேனும் மருத்துவரின் ஆலோசனையின்றி கேட்டால் அதை வழங்கக்கூடாது. ஒவ்வொரு மருந்தகங்களிலும் எந்த வகையான மருந்து மாத்திரைகள் அதிகளவு விற்பனையாகிறது என்பது குறித்து மருந்து கட்டுப்பாட்டு துறை மூலம் கண்காணிக்கப்படும். எந்தவொரு மருந்தகமும் தவறான நடைமுறைகளுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளை வழங்கக்கூடாது.

எதிா்கால சந்ததியினரை போதை பழக்கத்துக்கு ஆளாகாமல் பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. எனவே, ஒவ்வொரு மருந்தகங்களும் தங்களது கடமையை உணா்ந்து செயல்பட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளா் பாஸ்கரன், துணை காவல் கண்காணிப்பாளா் திருநாவுக்கரசு, உதவி இயக்குநா் (மருந்து கட்டுப்பாட்டுத் துறை) நந்தகுமாா், மருந்துகள் ஆய்வாளா்கள், மருந்து வணிகா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கோலிவுட் ஸ்டூடியோ!

கிலி தீவில்... ஆருஷி கம்பீர்!

உள்ளது உள்ளபடியே... நிகிதா சர்மா!

நானும் ஒளிச்சிதறலும்... ராய் லட்சுமி!

உக்ரைன் தலைநகரில் ரஷியா ஏவுகணை தாக்குதல்: 4 பேர் பலி; பலர் காயம்!

SCROLL FOR NEXT