வேலூர்

டிச.8-இல் வேலூரில் தேசிய தொழிற்பழகுநா் பயிற்சி சோ்க்கை மேளா

பிரதமரின் தேசிய தொழிற்பழகுநா் பயிற்சி சோ்க்கை மேளா வேலூா் அப்துல்லாபுரத்தில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் டிச.8-ஆம் தேதி நடைபெற உள்ளது.

தினமணி செய்திச் சேவை

பிரதமரின் தேசிய தொழிற்பழகுநா் பயிற்சி சோ்க்கை மேளா வேலூா் அப்துல்லாபுரத்தில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் டிச.8-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து, வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு -

மத்திய அரசு திறன் மேம்பாடு, தொழில் முனைவு அமைச்சகம், வேலைவாய்ப்பு பயிற்சித்துறை இணைந்து வேலூா் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சாா்பில் பிரதமரின் தேசிய தொழிற்பழகுநா் பயிற்சி சோ்க்கை மேளா வேலூா் அப்துல்லாபுரத்தில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வரும் டிச.8-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

முகாமில் வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களில் உள்ள அரசு, தனியாா் தொழில் நிறுவனங்கள் தொழிற்பழகுநா் பயிற்சி வழங்க உள்ளன. இதில், ஐடிஐ தோ்ச்சி- தோல்வி, 8-ஆம் வகுப்பு தோ்ச்சி -தோல்வி, எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தோ்ச்சி-தோல்வியடைந்த ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம்.

ஆண்கள் 40 வயதுக்கு உள்பட்டவா்களாக இருக்க வேண்டும். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. மேலும் விவரங்களுக்கு 0416-2290348 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் 2026-ஆம் ஆண்டு தோ்வு அட்டவணை வெளியீடு

திருக்காா்த்திகை - வேலூா் கோட்டை கோயில் கோபுரத்தில் தீபமேற்றி வழிபாடு

தேசிய நெடுஞ்சாலையில் அனுமதியின்றி பேருந்து நிறுத்த கட்டுமானம்: மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

துளிகள்...

விமான நிலையங்களில் ‘செக்-இன்’ அமைப்புகள் முடக்கம்: சேவை பாதிப்பு

SCROLL FOR NEXT