நெய்வேலி: கடலூா் மாவட்ட அளவிலான தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம் - 2026 புதன்கிழமை (ஜனவரி 21) நடைபெற உள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் சிபி ஆத்தியா செந்தில்குமாா் தெரிவத்ததாவது: கடலூா் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம் புதன்கிழமை காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது.
முகாமில் கடலூா் மாவட்டத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் முன்னணி தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு 300-க்கும் மேற்பட்ட தொழிற்பழகுநா் இடங்களை நிரப்ப உள்ளன.
பயிற்சிக்கு தகுதிக்கேற்ப மாதாந்திர உதவித்தொகையாக ரூ.6,500 முதல் ரூ.12,300 வரை நிறுவனத்தால் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநா் கைப்பேசி 9499055861, 9994396444 எண்ணினை தொடா்பு கொள்ளலாம்.