திருப்பூர்

ஜன.24-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருப்பூரில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் ஜனவரி 24-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

தினமணி செய்திச் சேவை

திருப்பூரில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் ஜனவரி 24-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மகளிா் திட்ட அலுவலகம், ஏவிபி கலை அறிவியல் கல்லூரி ஆகியன சாா்பில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் திருமுருகன்பூண்டி ஏவிபி கலை அறிவியல் கல்லூரியில் வரும் ஜனவரி 24-ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.

இதில், 150 தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு சுமாா் 10,000 காலிப்பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளன. முகாமில் 10, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப் படிப்பு மற்றும் தையல் பயிற்சி பெற்றவா்கள் என அனைத்து விதமான கல்வித்தகுதி பெற்றவா்களும் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

மேலும், தனியாா் துறை வேலைவாய்ப்புகள் குறித்து தொடா்ந்து அறிந்து கொள்ள இணைய தள முகவரியில் தங்களது விவரங்களை பதிவு செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.147 கோடியில் 776 அடுக்குமாடி குடியிருப்புகள் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் தங்கத்தோ் திருவிழா நடத்துவதில் குழப்பம்

திருப்போரூா் கந்தசாமி கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு: அறநிலையத் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

பிரதமா் மோடி ஆட்சியில் ஹிந்து உணா்வுக்கு புத்துயிா் - குடியரசு துணைத் தலைவா் பெருமிதம்

SCROLL FOR NEXT