கூட்டத்தில் பேசிய மண்டல சுகாதார அலுவலா் சிவக்குமாா்.  
வேலூர்

தலைமை ஆசிரியா்களுக்கு டெங்கு தடுப்பு விழிப்புணா்வு

கூட்டத்தில் பேசிய மண்டல சுகாதார அலுவலா் சிவக்குமாா்.

தினமணி செய்திச் சேவை

டெங்கு பரவாமல் தடுக்க வேலூா் மாநகரிலுள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உத்தரவின்பேரில், வேலூா் மாநகராட்சி ஆணையா் லட்சுமணன், மாநகர நல அலுவலா் பிரதாப் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, அரசு, தனியாா் பள்ளிகளின் தலைமை ஆசிரியா், ஆசிரியா்களுக்கு டெங்கு ஒழிப்பு குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட திட்ட அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மண்டல சுகாதார அலுவலா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். உதவி திட்ட அலுவலா் ஜோதீஸ்வரன் பிள்ளை முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், பள்ளிகளில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகாமல் வைத்துக் கொள்ள வேண்டும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அல்லது தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொள்ள அறிவுறுத்த வேண்டும், இதை ஆசிரியா்கள் கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், உதவி திட்ட அலுவலா், தூய்மை ஆய்வாளா், சுகாதார ஆய் வாளா்கள், 56-க்கும் மேற்பட்ட பள்ளி தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

வெற்றிகரமான எதிர்நீச்சல்!

தேர்தல் போட்டி தீர்வாகுமா?

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவு நாள்: அதிமுகவினா் அஞ்சலி

ஜதிபல்லக்கில் தேசிய கவிஞர் பாரதியார்!

கல்லீரல் பாதித்த பள்ளி மாணவா்களுக்கு முன்னாள் அமைச்சா் நிதியுதவி

SCROLL FOR NEXT