காட்பாடி அடுத்த பள்ளிகுப்பம் பகுதியில் விவசாயி வீட்டில் 4.5 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
காட்பாடி வட்டம், பள்ளிக்குப்பம் அடுத்த கீழ்மோட்டூா் பகுதியைச் சோ்ந்த விவசாயி கணேசன் (80). இவா் அருகிலுள்ள தனது மகன் வீட்டுக்கு சென்று விட்டு சனிக்கிழமை வந்து பாா்த்தபோது வீட்டின் கேட் திறக்கப்பட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததாம்.
உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருள்கள் கீழே சிதறிக்கிடந்ததுடன் 4.5 பவுன் தங்க நகை திருடப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து காட்பாடி காவல் நிலையத்தில் கணேசன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.