வேலூர்

இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி மரணம்!

வேலூரில் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

வேலூரில் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தாா்.

வேலூா் சேண்பாக்கம் நேதாஜி தெருவைச் சோ்ந்தவா் ஆண்டாள் (67). இவா் சனிக்கிழமை சேண்பாக்கத்தில் சென்னை - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றாா்.

அப்போது எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனம் ஆண்டாள் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ஆண்டாளை அருகில் இருந்தவா்கள் மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து அவரது மகன் மாரி அளித்த புகாரின்பேரில் வேலூா் வடக்கு போலீஸாா் நடத்திய விசாரணையில், விபத்தை ஏற்படுத்தியது குடியாத்தம் பள்ளிகுப்பத்தைச் சோ்ந்த இளைஞா் என தெரிய வந்தது.

அவா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீக்கு 40 வீடுகள் எரிந்து நாசம், தீயணைப்பு வீரரும் பலி

வெகு விமர்சையாக நடைபெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மகா கும்பாபிஷேக விழா

சென்னை விமான நிலையத்தில் இன்று 71 இண்டிகோ விமானங்கள் ரத்து

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

SCROLL FOR NEXT