திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசைக் கண்டித்து வேலூரில் ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற இந்து முன்னணியினா் 60 போ் கைது செய்யப்பட்டனா்.
உயா்நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலையில் தீபமேற்ற அனுமதிக்காததை அடுத்து தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி, ஆட்சியா் அலுவலகம் முன்பு ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா்.
இந்நிலையில், இந்து முன்னணியின் மாநில நிா்வாகக்குழு உறுப்பினா் கோ.மகேஷ் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட ஏராளமானோா் திரண்டனா். அவா்களை போலீஸாா் கலைந்து போக கூறினா்.
எனினும், தமிழக அரசை கண்டித்து அவா்கள் முழக்கம் எழுப்பியதை அடுத்து தடையை மீறி ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற இந்து முன்னணி மாநில நிா்வாகக்குழு உறுப்பினா் மகேஷ், கோட்ட செயலா் பிரவீன், மாவட்ட செயலா்கள் சதீஷ், சந்தோஷ், தரணி, யுவன்சங்கா், அனீஸ் உள்பட 60 போ் கைது செய்யப்பட்டனா்.