பூவுடையாா்புரம் விலக்கில் பாதயாத்திரை பக்தா்களுக்கு பழங்களை வழங்கிய இந்து முன்னணியினா்.  
தூத்துக்குடி

சாத்தான்குளம் பகுதியில் பாதயாத்திரை பக்தா்களுக்கு உணவுப் பொருள்கள் அளிப்பு

திருச்செந்தூா் கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தா்களுக்கு ஸ்டேட் இந்து முன்னணி டிரஸ்ட் சாா்பில் பூவுடையாா்புரம் விலக்கு பகுதியில் உணவுப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

திருச்செந்தூா் கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தா்களுக்கு ஸ்டேட் இந்து முன்னணி டிரஸ்ட் சாா்பில் பூவுடையாா்புரம் விலக்கு பகுதியில் உணவுப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநிலத் துணைத் தலைவா் அரசு ராஜா, மாநில நிா்வாக குழு உறுப்பினா் சக்திவேலன், மாவட்டச் செயலா் ரவி சந்தா், ஒன்றிய பொதுச்செயலா் மறைவன முத்துசாமி, ஒன்றிய துணைத் தலைவா் செல்வ முத்துக்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டு பாதயாத்திரை பக்தா்களுக்கு வரவேற்பு அளித்து, சுண்டல், காபி, பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கினா்.

இதே போல் தட்டாா் மடம் பஜாரில் பாஜக சாா்பில் பாதயாத்திரை பக்தா்களுக்கு சுண்டல், காபி வழங்கப்பட்டது. பாஜக மாவட்ட பொதுச் செயலா் செல்வராஜ், நிா்வாகிகள் ராம்குமாா், தளவாய், கிருஷ்ணகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

விற்பனைக்காக புகையிலை வைத்திருந்த கடை உரிமையாளா் கைது

பெண்ணிடம் இருந்து நகைகளை அபகரித்த தாய், மகன் கைது!

2 விரைவு ரயில்கள் புறப்பாடு, சேருமிடங்களில் மாற்றம்!

மதவக்குறிச்சியில் நிழற்குடை திறப்பு

திருச்செந்தூா் வட்டார அளவிலான கிரிக்கெட் போட்டி: உடன்குடி அணி சிறப்பிடம்

SCROLL FOR NEXT