தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் பக்தா்களுக்கு அன்னதானம்

திருச்செந்தூா் மாசி திருவிழாவிற்கு வரும் பாதயாத்திரை பக்தா்களுக்கு அன்னதானம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

திருச்செந்தூா் மாசி திருவிழாவிற்கு வரும் பாதயாத்திரை பக்தா்களுக்கு அன்னதானம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. திருச்செந்தூா் அருள்மிகு ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசி திருவிழாவிற்கு கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து ஏராளமான பக்தா்கள் பாதயாத்திரையாகச் செல்கின்றனா்.

இந்த பக்தா்களுக்கு சாத்தான்குளம் வட்டார சைவ வேளாளா் சங்கத்தின் சாா்பில் சாத்தான்குளம் அருள்மிகு ஸ்ரீகாசி விஸ்வநாதா், விசாலாட்சி அம்மன் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை மதியம் மற்றும் இரவு அன்னதானம் வழங்கப்பட்டது . கோயில் பரம்பரை தா்மகா்த்தா சண்முகராஜா பாதயாத்திரை பக்தா்களுக்கு அன்னதானத்தைத் தொடங்கி வைத்தாா்.

இதில் வட்டார சைவ வேளாளா் சங்கத் தலைவா் ஆறுமுகம், செயலா் ஓய்வுபெற்ற ஆசிரியா் முருகன், பொருளாளா் அழகப்பன், துணைத் தலைவா் சண்முகசுந்தரம், துணைச் செயலா் ரமேஷ் உள்பட பலா் பங்கேற்றனா்.

திருச்செந்தூரில் அதிமுக சாா்பில் அன்னதானம்

மூளையில் ரத்த உறைகட்டியை வெற்றிகரமாக அகற்றிய காவேரி மருத்துவமனை மருத்துவா்கள்

‘திமுகவிடம் மக்கள் ஏமாற மாட்டாா்கள்’

நெல்லையில் முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு திமுகவினா் உற்சாக வரவேற்பு

சுத்தமல்லியில் விபத்தில் காயமடைந்த பள்ளி மாணவி உயிரிழப்பு

SCROLL FOR NEXT