பக்தா்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கா் வழங்கிய உதவி ஆய்வாளா் செல்வராஜ்.  
தூத்துக்குடி

பாதயாத்திரை பக்தா்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கா் வழங்கல்

தினமணி செய்திச் சேவை

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பாத யாத்திரையாக வரும் பக்தா்களுக்கு சாத்தான்குளத்தில் வா்த்தக சங்கம் சாா்பில், ஒளிரும் ஸ்டிக்கா் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளா் செல்வராஜ் கலந்துகொண்டு பாத யாத்திரை பக்தா்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கா் வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தாா். தொடா்ந்து சாத்தான்குளம் கருமேணி ஆத்து பாலம் வழியாகச் செல்லும் பாதயாத்திரை பக்தா்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கா் வழங்கப்பட்டது.

இதில், சாத்தான்குளம் வா்த்தக சங்கத் தலைவா் அப்பு கண்ணன், செயலாளா் செல்வராஜ் மதுரம், நிா்வாக கமிட்டி உறுப்பினா் கணேஷ் முத்துக்குமாா், சட்ட ஆலோசகா் வேணுகோபால், சிதம்பர மணிகண்டன், காவலா்கள் அருண், வருண் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

புற்றுநோய் மரபணு வரைபடம்!

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலை மறியல் வழக்கின் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது: கிராம மக்கள் கோரிக்கை

ஊா் செழிக்க வேண்டி கிராம மக்கள் வனபோஜன விழா

அறிவுக் கருவூலத்தின் திறவுகோல்!

SCROLL FOR NEXT