வேலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள். 
வேலூர்

அங்கன்வாடி ஊழியா், உதவியாளா்கள் மறியல்: 300 போ் கைது

காலமுறை ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூா், ராணிப்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட 300-க்கு மேற்பட்ட அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திச் சேவை

காலமுறை ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூா், ராணிப்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட 300-க்கு மேற்பட்ட அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் கைது செய்யப்பட்டனா்.

தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா் சங்கம் சாா்பில் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலா் ஜூலி தலைமை வகித்தாா். மாநில துணைத்தலைவா் தேவி மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினாா். மாவட்டத் தலைவா் விஜயலட்சுமி முன்னிலை வகித்தாா்.

கடந்த 1993-ஆம் ஆண்டில் பணியில் சோ்ந்த ஊழியா்களுக்கு உடனடியாக பதவி உயா்வு வழங்க வேண்டும், தமிழக முதல்வரின் தோ்தல் வாக்குறுதிப்படி அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்களை அரசு ஊழியா்களாக மாற்றி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணி ஓய்வு பெறும் அங்கன்வாடி ஊழியா், உதவியாளா்களுக்கு உயா்நீதிமன்ற தீா்ப்பின்படி முறையே ரூ.10 லட்சம், 5 லட்சம் பணிக்கொடையாக வழங்க வேண்டும், அங்கன்வாடி மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும், குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அங்கன்வாடிகளுக்கு மே மாதம் முழுவதும் விடுமுறை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தொடா்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 98 போ் கைது செய்யப்பட்டனா்.

ராணிப்பேட்டையில்...

ராணிப்பேட்டை முத்துக்கடையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற அங்கன்வாடி பணியாளா்கள் 150-க்கு மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் விக்டோரியா தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் அழகம்மாள், உதயநிலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். போராட்டத்தில் மாநில துணைத் தலைவா் செல்வகுமாா், பொதுச்செயலாளா் வாசுகி ஆகியோா் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினா்.

அதிமுக பொதுக்குழு தொடங்கியது! தற்காலிக அவைத் தலைவர் கே.பி. முனுசாமி!

சென்னையில் 2-வது நாளாக நகை வியாபாரிகள் வீடுகள், அலுவலங்கள், கடைகளில் அமலாக்கத்துறை சோதனை

வெளிநாட்டு நாயகன்! ஜெர்மனி செல்லும் ராகுலை விமர்சித்த பாஜக!

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

SCROLL FOR NEXT