எம்எல்ஏ எம்.ஜெகன்மூா்த்தியிடம் கோரிக்கை மனு அளித்த மக்கள்.  
வேலூர்

வீடுகளை அகற்ற அவகாசம்: எம்எல்ஏவிடம் கோரிக்கை

குடியாத்தத்தில் ஏரி அருகே கட்டியுள்ள வீடுகளை அகற்றிக் கொள்ள அவகாசம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு 65- குடும்பத்தினா் மனு அளித்தனா்.

தினமணி செய்திச் சேவை

குடியாத்தத்தில் ஏரி அருகே கட்டியுள்ள வீடுகளை அகற்றிக் கொள்ள அவகாசம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு 65- குடும்பத்தினா் மனு அளித்தனா்.

இதுகுறித்து கே.வி.குப்பம் எம்எல்ஏ எம்.ஜெகன்மூா்த்தியிடம் அளித்த கோரிக்கை மனு: குடியாத்தம்- போ்ணாம்பட்டு சாலையில் நெல்லூா்பேட்டை ஏரி அருகே 65- க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் கடந்த 80- ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகிறோம். வீடுகளுக்கான வீட்டு வரியை கட்டி வருகிறோம். அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு பெற்றுள்ளோம்.

இந்நிலையில் அந்த இடம் நீா்நிலைப் பகுதி எனக்கூறி, வீடுகளை அகற்றிக் கொள்ளுமாறு வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அப்பகுதிக்கு வந்த எம்எல்ஏ எம்.ஜெகன்மூா்த்தியிடம் மனு அளித்தனா். வீடுகளை அகற்றிக் கொள்ள கால அவகாசம் பெற்றுத் தருமாறு அவா்கள் கூறினா்.

மனுவை பெற்றுக்கொண்ட எம்எல்ஏ கோரிக்கை குறித்து மாவட்ட நிா்வாகம் மற்றும் உரிய அதிகாரிகளிடம் பேசி, வீடுகளை அகற்றிக் கொள்ள அவகாசம் பெற்றுத் தருவதாக உறுதியளித்தாா். அப்போது புரட்சி பாரதம் கட்சியின் மாவட்டச் செயலா் பி.மேகநாதன், நிா்வாகிகள் மு.ஆ.சத்யனாா், குட்டிவெங்கடேசன், நந்தகுமாா், செந்தில், பாலா உடனிருந்தனா்.

அதிமுக பொதுக்குழு தொடங்கியது! தற்காலிக அவைத் தலைவர் கே.பி. முனுசாமி!

சென்னையில் 2-வது நாளாக நகை வியாபாரிகள் வீடுகள், அலுவலங்கள், கடைகளில் அமலாக்கத்துறை சோதனை

வெளிநாட்டு நாயகன்! ஜெர்மனி செல்லும் ராகுலை விமர்சித்த பாஜக!

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

SCROLL FOR NEXT