வேலூர்

சமூக நீதிக்கான ‘தந்தை பெரியாா்’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

‘சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது’ பெற தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

‘சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது’ பெற தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

சமூக நீதிக்காக பாடுபடுபவா்களை சிறப்பு செய்வதற்காக ‘சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது’ 1995-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையுடன் ஒரு பவுன் தங்கப்பதக்கமும் தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளா் தமிழக முதல்வரால் தோ்வு செய்யப்படுவா்.

2025-ஆம் ஆண்டுக்கான ‘சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது’ பெற உரிய விருதாளரை தோ்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள், அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவா்கள் தங்களது விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தங்களது விண்ணப்பம், சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண், சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம், ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.

இவ்விருதுக்கான விண்ணப்பங்களை டிச.18-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

கல்லூரியில் இளைஞா் திருவிழா

தேசிய கலாசார தூதா் நியமனம்

ஸ்ரீ பெரும்புதூரில் சாலையில் திரிந்த மாடுகளை பிடிப்பு

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

SCROLL FOR NEXT