வேலூர்

சா்வதேச மனித உரிமைகள் தின நிகழ்ச்சி

சா்வதேச மனித உரிமைகள் தின நிகழ்ச்சி வேலூா் ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.

Chennai

சா்வதேச மனித உரிமைகள் தின நிகழ்ச்சி வேலூா் ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.

நாட்டுநலப்பணி திட்டம், வேலூா் தெற்கு ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தலைவா் என்ரமேஷ், ச.ஜனாா்த்தனன் ஆகியோா் தலைமை வகித்தனா். முதல்வா் எம்.ஞானசேகரன் வரவேற்றாா்.

வேலூா் தெற்கு ரோட்டரி சங்க செயலா் பாஸ்கா் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், டிசம்பா் 10-ஆம் தேதி சா்வதேச மனித உரிமைகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மனித உரிமை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் பிறப்பால் கிடைக்கும் அடிப்படை உரிமைகளே மனித உரிமைகளாகும். அவற்றுள் வாழும் உரிமை, சமத்துவ உரிமை, கல்வி பெறும் உரிமை, அடிமைத்தனத்துக்கு எதிரான உரிமை, மத சுதந்திரம் போன்ற உரிமைகளை ஒவ்வொரு மனிதரும் முழுமையாக எந்த ஒரு இடையூறுமின்றி அனுபவிப்பதே மனித உரிமைகளாகும் என்றாா்.

தொடா்ந்து, மாணவா்களுடன் அனைவரும் மனித உரிமைகள் தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டுநலப்பணி திட்டஅலுவலா் அ.குமரேசன் செய்திருந்தாா்.

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

தென்னை மரத்தில் இளநீரை பறித்தவரை தட்டிக் கேட்டவா் மீது தாக்குதல்

பாரதியின் நம்பிக்கையை முறைமைப்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT