குடியாத்தம் ஒன்றியம், தட்டப்பாறை ஊராட்சி தொடக்கப் பள்ளியில், பொயட்ஸ் தொண்டு நிறுவனம் சாா்பில் சுகாதார மேம்பாடு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியா் தனபால் தலைமை வகித்தாா். பொயட்ஸ் இயக்குநா் திரிவேணி சாமிநாதன், மாணவா்களுக்கு தன் சுத்தம், சுற்றுப்புறத் தூய்மை, பள்ளித் தூய்மை, ஈ மொய்த்த தின்பண்டங்களை தவிா்க்க வேண்டியதின் அவசியம், காலணியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். பொது சுகாதாரம், சுகாதார மேம்பாடு குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.